Latest Posts

Thursday, March 11, 2010

போட்டோக்கைளை வடிவமைக்க ஒரு சிறந்த மென்பொருள்

பொதுவக எல்லோரும் ஒருபோட்டோவினை Width Height குறைப்பதற்கு போட்டோசொப்பையே பயன்படுத்துவார்கள் அது நேரத்தை வீணடிக்கும். இதோ இந்த மென்பொருள் மூலம் GIF Images,resize, width height resize,web page images maker,color picker,image splitter,print,batch editor
இன்னும் பல்வேறு வசதிகள் கொண்டுள்ளது இந்த மென்பொருள்
மற்றும் இது உபயோகிக்கவும் இலகுவாநது இது இலவசமாக கிடைக்கிறது இதன்மூலம் உங்கள் இணையத்தளத்திற்குதேவையான GIF Images இலகுவாக உருவாக்கலாம் மற்றும் பவேறுபட்ட வர்ணங்களும் உண்டு

இந்த மென்பொருளை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக்செய்யவும்

கீளேஉள்ள படத்தனை பாருங்கள்






இந்த மென்பொருளை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக்செய்யவும்
read more...

Monday, September 7, 2009

ஈ-மெயில் சேவையில் முதலிடத்தில் யாஹூ


இமெயில் சேவை வழங்குவதில் எந்த தளம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது என்பதில் சரியான போட்டி நிலவி வருகிறது. அண்மையில் காம் ஸ்கோர் என்ற நிறுவனம் எடுத்த கணக்கின்படி கூகுள் இந்த இமெயில் ஏணியில் நான்காவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது. சென்ற மாதம் இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 70 லட்சம். ஏ.ஓ.எல். நிறுவனம் 10 லட்சம் குறைவாகக் கொண்டு நான்காவது இடத்திற்குச் சென்றது.

சரி, முதல் இடத்தில் உள்ளது யார்? சர்ச் இஞ்சின் பயன்பாட்டினைப் பொறுத்த வரை யாஹூவின் இடத்தைக் கூகுள் பெற்றிருக்கலாம். ஆனால் இமெயில் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் யாஹூ தொடர்ந்து ஏறத்தாழ 10 கோடியே 40 லட்சம் பேருடன் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் விண்டோஸ் லைவ் ஹாட் மெயில் உள்ளது. இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4 கோடியே 70 லட்சம்.

இந்த விஷயத்தில் யாஹூ முதல் இடத்தைப் பெற்றிருந்தாலும், வேகமாகப் பெருகி வரும் இமெயில் தளம் என்ற வகையில் கூகுள் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற ஆண்டு மட்டும் இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 46% உயர்ந்துள்ளது. இதனோடு ஒப்பிடுகையில் யாஹூவின் வளர்ச்சி 22% மட்டுமே.

புதிய வசதிகளைத் தொடர்ந்து தருவதில் கூகுள் நிறுவனமே முன்னணியில் உள்ளது. இப்படியே போனால் கூகுள் இந்த பிரிவில் முதல் இடத்தைப் பெறுவது மிக எளிதான ஒன்றாக மாறிவிடும். யாஹூ தன் இடத்தைத் தக்கவைக்க கூகுளைப் போல ஏதேனும் புதுமையான வசதிகளைத் தந்து கொண்டே இருக்க வேண்டும்
read more...

கூகுளிற்கு வயது பதினொன்று...!!!


செப்டம்பர் 7ல் கூகுள் தன் பதினோராவது ஆண்டை முடித்து 12 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. 1998ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ம் திகதி கூகுல் தனது முதலாவது பிறந்த நாளை கொண்டாடியது.

கூகுள் எர்த் மற்றும் மேப்ஸ் மூலம் ஆகாயத்தில் அடி எடுத்து வைத்து தகவல் தொழில் நுட்ப உலகில் இன்று இன்னும் உயர உயரச் செல்லும் இந்நிறுவனத்தின் வளர்ச்சி இளைய தலைமுறை எப்படி உழைக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாய் விளங்குகிறது. இதனுடைய வளர்ச்சியைக் காணலாம்.

1995

லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் (Larry Page and Sergey Brin) ஸ்டான் போர்டு பல்கலைக் கழகத்தில் சந்தித்து கலந்தாய்வு செய்கின்றனர்.

1996

பேஜ் மற்றும் பெரின் பேக்ரப் என்னும் சர்ச் இஞ்சினை வடிவமைக்கின் றனர். இணைய தள லிங்க்குகளை இது ஆய்வு செய்து தகவல்களைத் தெரிவிக் கிறது. இதன் பின் கூகுள் முதல் பதிப்பு ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் வெப்சைட்டில் வெளியிடப்படுகிறது.

1997

கூகுள். காம் பதிவு செய்யப்படுகிறது. சன் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஆண்டி (Andy Bechtolsheim ) கூகுள் நிறுவனத்தில் ஒரு லட்சம் டாலர் முதலீடு செய்கிறார். கூகுள் கார் ஷெட் ஒன்றில் தன் முதல் பணி மையத்தை அமைக்கிறது. அடுத்த செப்டம்பர் 7ல், அதன் முதல் பிறந்த நாளில், கூகுள் அறிந்தேற்பு பெறுகிறது.

1999

கூகுள் நிறுவனம் தொழிலில் வர்த்தக ரீதியாக புது முயற்சி செய்பவர்களுக்கான முதலீடு 2 கோடியே 50 லட்சம் டாலர் பெறுகிறது. 8 ஊழியர்களுடன் முழுமையான ஓர் அலுவலகத்தினை மவுண்ட்டன் வியூ என்ற இடத்தில் அமைக்கிறது.

2000

குகூள் முதன் முதலாக அட் வேர்ட்ஸ் என்னும் விளம்பரப் பிரிவினை அமைக்கிறது. யாஹூ கூகுள் சர்ச் இஞ்சினைத் தன் தேடல் சாதனமாக அமைத்துக் கொள்கிறது. பத்து மொழிகளில் கூகுள் வெளிவருகிறது. உலகின் மிகப் பெரிய வேகமான தேடல் சாதனமாக கூகுள் இடம் பிடிக்கிறது.

2001

கூகுள் நிறுவனத்தின் தலைவராக எரிக் ஸ்மித் ஆகிறார். பேஜ் மற்றும் பிரின் தயாரிப்பு மற்றும் தொழில் நுட்பம் ஆகிய இருபிரிவுகளுக்கு ஒவ்வொருவரும் தலைவராகின்றனர். கூகுள் தேஜா. காம் நிறுவனத்திலிருந்து 1995 ஆண்டிலிருந்து வெளியான 50 கோடி தகவல்களைப் பெறுகிறது.

2002

கூகுள் லேப்ஸ், கூகுள் நியூஸ் (4000 செய்தி தொடர்பு களுடன்) மற்றும் ப்ரூகுள் (Froogle) தொடங்கப்பட்டன. அமெரிக்க இணைய தள நிறுவனமான ஏ.ஓ.எல். (AOL) குகூள் தேடு தளத்தைப் பயன் படுத்த ஒப்புக் கொள்கிறது.

2003

அமெரிக்காவில் இயங்கும் டயலக்ட் சொசைட்டி (வட்டார மொழி குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நிறுவனம்) 2002 ஆன் ஆண்டில் அதிகம் பயன் படுத்தப்பட்ட சொல் “கூகுள்” எனக் கண்டு அறிவிக்கிறது. பிளாக்குகளின் காரணகர்த்தாவான பைரா லேப்ஸ் (Blogger) நிறுவனத்தை கூகுள் பெறுகிறது.
2004

மூலதன நிதி திரட்ட பங்கு ஒன்று 85 டாலர் என்ற விலையில் பங்குகளை கூகுள் வெளியிட்டது. இமெயில் சேவை ஜிமெயில் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இத்துடன் டெஸ்க் டாப் சர்ச் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. பைகாஸா நிறுவனம் வாங்கப்பட்டது. அதன் தேடல் தொகுப்பு அட்டவணையில் உள்ள 600 கோடி ஐட்டங்கள் கூகுள் சர்ச் இஞ்சினுக்கு இணைந்தன.

2005

கூகுள் எர்த், கூகுள் டாக், கூகுள் பேஸ் மற்றும் கூகுள் பிளாக் சர்ச் ஆகியவை தொடங்கப்பட்டன. கூகுள் ரீடர் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். ஃபீட் ரீடர் அறிமுகமானது. கூகுள் அனலிட்டிக்ஸ் என்ற இணைய தள ஆய்வு சாதனமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

2006

யு–ட்யூப் நிறுவனம் கையகப்படுத்தப் பட்டது. காலண்டர், ஜிமெயில் மொபைல் மற்றும் கூகுள் பைனான்ஸ் ஆகியவை உருவாகி வெளியாயின. கூகுள் செக்அவுட் வர்த்தக நோக்கில் தரப்பட்டது. ஒரு சில பயனாளி களுக்கென கூகுள் பேஜ் கிரியேட்டர் வடிவமைக் கப்பட்டு தரப்பட்டது. ஒரு சில பிரச்சினை களுக்குப் பின் சீனாவில் கூகுள் நுழைந்தது.

2007

டபுள் கிளிக் என்னும் விளம்பர நிறுவனத்தை கூகுள் வாங்கியது. ஜைக்கு என்னும் சோசியல் மொபைல் நிறுவனத்தினயும் பெற்றது.

2008

கூகுள் பிரவுசர் குரோம் வெளியானது. வெளியான ஒரே நாளில் உலகின் மொத்த பிரவுசர் பயன்பாட்டில் 1 % மக்களிடம் சென்றது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. விக்கிபீடியாவிற்கு இணையாக கூகுள் நால் (Google Knol) வெளியானது.

2009

கூகிள் தனது ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்கான ( Google Chrome OS ) அறிவிப்பை வெளியிட்டது. மைக்கரோ சாப்டின் பிங்க் தேடுபொறிக்கு போட்டியாக கூகிள் Google squared எனும் தேடுபொறியை அறிமுகப்படுத்தியது.

மைக்ரோசாப்ட் / கூகுள் யார் பெரியவர்?

தகவல் தொழில் நுட்ப உலகில் எதாவது நடந்தால் உடனே அது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான மோதலாகத்தான் இருக்கிறது. கூகுள் நிறுவனம் தொடங்கி 11 ஆண்டுகள் தான் முடிந்துள்ளது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 31 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. மனிதனின் சிந்தனைப் போக்கையே மாற்றி அமைத்த நிறுவனம் மைக்ரோசாப்ட். எம்.எஸ்.டாஸ், எம்.எஸ். ஆபீஸ், விண்டோஸ், ஹாட்மெயில், விசுவல் ஸ்டுடியோ, மைக்ரோ சாப்ட் டெவலப்பர் நெட்வொர்க், டாட் நெட் பிரேம் ஒர்க், விண்டோஸ் மொபைல், பலராலும் இன்று விளையாடப்படும் கேம்ஸ், (Age of Empires, Halo, Microsoft Flight Simulator) எம்.எஸ்.என். லைவ் மெசஞ்சர், விஸ்டா தொழில் நுட்பம் என கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் உலகை மனித வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்த நிலைக்குக் கொண்டு வந்தது மைக்ரோசாப்ட் தான்.

இருப்பினும் சர்ச் இஞ்சின் என்பதனைத் தன் கையில் எடுத்து அதில் எவரெஸ்ட்டைத் தொட் டது குகூள்தான். அதனையே கம்ப்யூட்டரின் அடிப்படையாக அமைக்கத் தொடர்ந்து பாடு படும் குகூளின் திட்டம் ஒரு நாள் வெல்லலாம். அன்று மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டரின் நிலையையே மாற்றலாம். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
read more...

ஹார்ட் டிஸ்க் உருவான பாதை


நம் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் தான் அனைத்து டேட்டாக்களும் பதிவு செய்யப்படுகின்றன. இங்குதான் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டரை இயக்குகிறது. ஏறத்தாழ 50 ஆண்டுகளா கத்தான் ஹார்ட் டிஸ்க் கம்ப்யூட்டரின் ஓர் இன்றியமையாத உறுப்பாக இயங்கி வருகிறது. கம்ப்யூட்டர் பயன்பாடு வந்த தொடக்கத்தில் ஹார்ட் டிஸ்க் என்பதே இல்லை. இப்போது 2 டெராபைட் கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்குகள் வந்துள்ளன. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை 1 ஜிபிக்கும் குறைவான அளவுள்ள ஹார்ட் டிஸ்க்குகளே புழக்கத்தில் இருந்தன. ஹார்ட் டிஸ்க்கின் விலை வேகமாகச் சரிந்து, தற்போது யாவரும் வாங்கும் வகையில் மலிவாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஒரு ஹார்ட் டிஸ்க் பதிந்து கொள்ளும் டேட்டா அளவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த ஹார்ட் டிஸ்க் வந்த பாதையினை தொடக்கம் முதல் இங்கு காணலாம்.



1956: ஐ.பி.எம். நிறுவனம் தன்னுடைய RAMAC 305 என்ற சிஸ்டத்தில் மிகப் பெரிய அளவிலான கொள்ளளவுடன் கூடிய ஹார்ட் டிஸ்க்கினை இணைத்து அறிமுகப்படுத்தியது. இந்த மிகப் பெரிய கொள்ளளவு எவ்வளவு தெரியுமா? 5 எம்.பி. அப்போது அது உண்மையிலேயே மிகப் பெரிய அளவிலான திறன் தான். ஒரு எம்பி டேட்டா கொள்ளளவிற்கு 10 ஆயிரம் டாலர் விலை எனக் குறிக்கப்பட்டது. இதன் திட அளவு இரண்டு ரெப்ரிஜிரேட்டர் அளவிற்கு இருந்தது. இதில் 24 அங்குல அளவுள்ள 50 பிளாட்டர்கள் இருந்தன.



1961: ஐ.பி.எம். ஹார்ட் டிஸ்க்கிற்கான டிரைவ் ஹெட் காற்றில் இருக்கும் வகையில் அமைத்தது.



1961: பைரண்ட் கம்ப்யூட்டர் 90 எம்பி திறனுடன் ஹார்ட் டிஸ்க்கைக் கொண்டு வந்தது. 39 அங்குல அகலத்தில் 24 டிஸ்க்குகள் கொண்டதாக இது அமைந்திருந்தது.



1963: முதல் முதலாக கம்ப்யூட்டர் சிஸ்டத்திலிருந்து வெளியே எடுக்கக் கூடிய ரிமூவபிள் ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். உருவாக்கியது. இதன் திறன் 2.69 எம்.பி.; 14 அங்குல அளவில் 6 பிளாட்டர்கள் இருந்தன.



1966: புதுவிதமான ரெகார்டிங் ஹெட் கொண்ட ஹார்ட் டிஸ்க்க்னை ஐ.பி.எம். உருவாக்கியது. திறன் 29.17 எம்.பி.



1971: ட்ரேக் சர்வோ சிஸ்டம் கொண்ட முதல் ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். கொண்டு வந்தது. இது 100 எம்பி திறன் கொண்டிருந்தது.



1973: நவீன வின்ச்செஸ்டர் ஹார்ட் டிரைவினை ஐ.பி.எம். கொண்டு வந்தது. 14 அங்குல பிளாட்டர்கள் 11 இருந்தன. திறன் 100 எம்பி.



1975: ஐ.பி.எம். 62 – ரோட்டரி ஆக்சுவேட்டருடன் வந்த முதல் ஹார்ட் டிஸ்க். 5 அல்லது 9 எம்பி திறனுடன் அமைந்தது.




1976: 43 எப்.டி. கிறிஸ்டல் என்னும், முதல் வளைந்து கொடுக்கக் கூடிய டிஸ்க் டிரைவ்; இரு பக்கமும் எழுதக் கூடியது. 8 அங்குல அகலத்துடன் 0.568 எம்பி கொள்ளளவு கொண்டது.




1976: ஷுகார்ட் அசோசியேட்ஸ் என்னும் நிறுவனம் முதல் 5.25 அங்குல அகலத்தில் ப்ளெக்ஸிபிள் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது. இதில் 0.2188 எம்பி டேட்டா பதியலாம்.
1979: பியுஜிட்ஸு நிறுவனம் 10.5 அங்குல அகலத்தில் ஹார்ட் டிஸ்க் டிரைவினைத் தந்தது. ஆறு பிளாட்டர்கள் உள்ளன.




1979: ஸீகேட் டெக்னாலஜிஸ் நிறுவனம் எஸ்.டி. 506 என்ற 5.25 அங்குல ஹார்ட் டிஸ்க்கினை 5 எம்.பி திறனுடன் கொண்டு வந்தது. இதில் 4 பிளாட்டர்கள் இருந்தன.
1980: முதல் கிகாபைட் அளவிலான ஹார்ட் டிஸ்க். ஐ.பி.எம். கொண்டு வந்த இந்த ஹார்ட் டிஸ்க் ஒரு ரெப்ரிஜிரேட்டர் அளவு இருந்தது. 250 கிலோ எடையுடன் 40 ஆயிரம் டாலர் மதிப்பு கொண்டிருந்தது.




1981: சோனி நிறுவனமும் டிஸ்க் தயாரிப்பு பணியில் இறங்கியது. 3.5 அங்குல ப்ளெக்ஸிபில் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது.கொள்ளளவு திறன் 0.4375 எம்பி.
1983: ரோடிம் முதல் 3.5 அங்குல ஹார்ட் டிஸ்க்கினைத் தயாரித்து வழங்கியது.இதில் இரண்டு பிளாட்டர்கள் இருந்தன. அளவு 10 எம்பி.




1986: அதிக திறனுடன் இயங்கும் ஸ்கஸ்ஸி ஹார்ட் டிஸ்க் டிரைவுடன் ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்ப்யூட்டர் வெளியானது.
1988: கானர் நிறுவனம் ஒரு அங்குல உயரத்திலான 3.5 அங்குல ஹார்ட் டிரைவினைத் தயாரித்து வழங்கியது. இன்று வரை இதுதான் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது. முதலில் இது 31 எம்பி திறன் கொண்டதாக அமைந்தது.




1992: ஸீ கேட் நிறுவனம் அதிர்வுகளைத் தாங்கக் கூடிய முதல் 2.5 அங்குல டிஸ்க் டிரைவினைத் தயாரித்து வழங்கியது.
1993: முதல் 7200 ஆர்.பி.எம். வேக ஹார்ட் டிஸ்க் டிரைவினை (Barracuda ST12550) ஸீ கேட் தயாரித்து வழங்கியது. இதில் 3.5 அங்குல அளவிலான பிளாட்டர்கள் பத்து அமைந்திருந்தன.
1996: மிக அதிக அளவிலான ஸ்டோரேஜ் டென்சிட்டி கொண்ட மீடியத்தினை ஐ.பி.எம். தந்தது. ஒரு சதுர அங்குல இடத்தில் நூறு கோடி பிட் டேட்டாவினை இதில் அமைக்க முடியும்.




1997: ஸீகேட் முதல் 10,000 ஆர்.பி.எம். வேக ஹார்ட் டிஸ்க் டிரைவினை வழங்கியது. முதலில் 3.5 அங்குல பிளாட்டர்களுடனும் பின் 3 அங்குல பிளாட்டர்களுடனும் அமைந் திருந்தது.



1999: மைக்ரோ டிரைவ் என அழைக்கப்படும் மிகச் சிறிய ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். வழங்கியது. இதில் ஒரு அங்குல பிளாட்டர்கள் இருந்தன. ஒரு பிளாட்டரில் 340 எம்.பி. டேட்டா பதிய முடிந்தது.




2000: அதிவேக இயக்கத்துடன், 15000 ஆர்.பி.எம்., ஹார்ட் டிஸ்க் டிரைவினை ஸீ கேட் தயாரித்து வழங்கியது.
2002: பெர்பென்டிகுலர் மேக்னடிக் ரெகார்டிங் டெக்னாலஜி அடிப்படையில் ஹார்ட் டிஸ்க் இயங்க முடியும் என ஸீ கேட் காட்டியது. இதன் மூலம் ஒரு சதுர அங்குல சிப்பில் 100 கிகா பிட்ஸ் தகவல்களைப் பதிய முடியும்.
2005: ஹிடாச்சி முதல் 500 ஜிபி ஹார்ட் டிஸ்க்கினை வெளியிட்டது.
2006: நோட்புக் கம்ப்யூட்டர்களில் பயன்படக் கூடிய Momentus 5400.3 என்னும் 2.5 அங்குல முதல் ஹார்ட் டிரைவினை ஸீ கேட் தந்தது. இதன் கொள்ளளவு திறன் 160 ஜிபி.




2006: Barracuda 7200.10 7200.10 என்ற பெயரில் 750 ஜிபி திறன் கொண்ட ஹார்ட் டிரைவினை ஸீ கேட் வெளியிட்டது.
2007: முதல் 1 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினை ஹிடாச்சி நிறுவனம் டெஸ்க் ஸ்டார் 7கே 1000 என்ற பெயரில் வெளியிட்டது. இதில் 3.5 அங்குல அளவிலான பிளாட்டர்கள் ஐந்து இருந்தன. ஒவ்வொரு பிளாட்டரும் பி.எம்.ஆர். தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி 200 ஜிபி டேட்டாவினைப் பதிந்தன.




2008: லேப் டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்த ஹிடாச்சி, 2. 5 அங்குல அளவிலான ஹார்ட் டிரைவினைத் தந்தது. இதில் இரண்டு பிளாட்டர்கள் 5,400 ஆர்.பி.எம்.வேகத்தில் சுழன்றன.
2009: வெஸ்டர்ன் டிஜிட்டல் முதல் 2 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது. நான்கு 3.5 அங்குல பிளாட்டர்கள் இதில் உள்ளன. ஒரு பிளாட்டரில் 500 ஜிபி டேட்டா பதியமுடியும்.
2009: வெஸ்டர்ன் டிஜிட்டல் மேலும் ஒரு சாதனையை மேற்கொண்டது. முதல் 1 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினை 2.5 அங்குல அகலத்தில் தயாரித்தது. லேப்டாப்பில் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தக்கூடிய இதன் பெயர் ஸ்கார்ப்பியோ புளு.
read more...

இன்டர்நெட் குறித்த தவறான கருத்துகள்


இன்டர்நெட் குறித்த பல தவறான கருத்துகள் எப்படியோ பரவி அனைவரிடமும் உண்மையான தகவல் என்று பதிந்து போயுள்ளன. இதற்குக் காரணம் மீடியாக்களும் சிலவற்றை நம்பி உண்மை என அவற்றைப் பரவி விட்டதே காரணம். அவை எவை என்று இங்கு காணலாம்.



1. அமெரிக்க துணை ஜனாதிபதி அல் கோர் (Al Gore) என்பவர்தான் இன்டர்நெட்டைக் கண்டுபிடித்தார். அவரே இதனை ஒரு பேட்டியில் கூறினார். இன்னொரு பக்கம் அவர் அப்படியெல்லாம் தனக்கு தேவையில்லாத பெருமையினைக் கோர வில்லை; ஆனால் இன்டர்நெட்டைக் கொண்டு வந்தேன் எனக் கூறினார் என்றும் சில இதழ்கள் எழுதின. எது உண்மை?



அமெரிக்க அதிபருக்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது, 1999 ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று சி.என்.என். செய்தி நிருபர், அல் கோரை நோக்கி தங்களிடம் உள்ள சிறப்பு என்ன என்று கேட்டார். அதற்கு அல் கோர், “நாட்டில் கல்வி, பொருளாதாரம், சுற்றுப்புறச் சூழ்நிலை பாதுகாப்பிற்கெனத் தான் பல திட்டங்களை மேற்கொண்டு வெற்றி பெற்றதாகக் கூறினார். தொடர்ந்து அதற்கு இன்டர்நெட்டினை உருவாக்குவதில் தொடக்க நிலையில் ஒத்துழைத்தேன்” என்று கூறினார். இது திரிக்கப்பட்டு இன்டர்நெட்டினை அவர்தான் உருவாக்கினார் என்று மாறி, அதுவே மறுக்கப்படாத தகவலாகவும் உறுதியானது. பின்னர் உண்மையான தகவல் தெரிவித்தது பலரைச் சென்றடையவில்லை.



2. உங்களுக்கு இன்டர்நெட் சேவை தரும் சர்வீஸ் புரவைடர் நிறுவனம் , இன்டர்நெட்டில் உங்களின் ஒவ்வொரு செயலையும் கண்டறிந்து பதிந்து வைக்கிறது. இதுவும் ஒரு கதையே. உங்களையும் உலகளாவிய இன்டர்நெட்டினையும் இணைப்பது இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் நிறுவனமே. நீங்கள் காண விரும்பும் இணைய தளங்களையும், நீங்கள் அனுப்பும் இமெயில் செய்திகளையும் இந்த நிறுவனத்தின் சர்வர் வழியாகத்தான் செல்கின்றன. இவற்றைப் பார்க்கக் கூடிய வழிகள் இந்த நிறுவனத்திற்கு உண்டு. ஆனால் இவை அனைத்தையும் பார்க்க வேண்டும் என்றால் அவற்றிற்கான கட்டமைப்பை உருவாக்க, புரோகிராம்களை எழுதி இயக்க நிறைய பணம் தேவைப்படும்.




மேலும் அவை எல்லாம் வெட்டிச் செலவாகிவிடும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட இவற்றைப் பதிவு செய்வது இல்லை. அரசால் சந்தேகப்படும் நபர்களின் இணைய நடவடிக்கைகள் மட்டுமே கண்காணிக்கப் படுகின்றன. எனவே அனைவரது இன்டர்நெட் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன என்பது உண்மை அல்ல.




3. குழந்தைகள் இன்டர்நெட்டில் உள்ள பாலியியல் தளங்களினால் கெடுக்கப் படுகின் றனர். மனரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர். குற்றம் செய்ய தூண்டப்படுகின்றனர். இதனாலேயே பெற்றோர்கள் இன்டர்நெட் தளங்களைத் தடை செய்கின்றனர். இது முழுவதும் உண்மை அல்ல; குழந்தைகளைக் காட்டிலும் பெரியவர்களே பாலியியல் குற்றங்களை இன்டர்நெட்டின் மூலம் மேற்கொள்கின்றனர். இன்டர்நெட்டினை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். எனவே குழந்தைகள் கெட்டுப்போகின்றனர் என்பது முற்றிலும் உண்மை அல்ல.




4. இன்டர்நெட்டில் படிப்பதெல்லாம் உண்மை. இன்டர்நெட்டில் யார் வேண்டுமானாலும் தங்களுக்கென பிளாக்கு களைத் தொடங்கித் தங்கள் கருத்துக்களை பதிக்கலாம். அப்படி இருக்கையில் இன்டர்நெட் தளங்களில் இருப்பது அனைத்தும் உண்மைத் தகவல்கள் என்று நம்ப முடியாது. யார் வேண்டுமானாலும் தங்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப எழுதி பிரசுரிக்கலாமே. அப்புறம் எப்படி அனைத்தும் உண்மை ஆகும்.
எனவே இணையத்தில் தகவல்களைப் படிக்கையில் அவற்றின் உண்மைத் தன்மை யினை உணர வேண்டும்.




தகவல்களைத் தரும் தளங்களின் தன்மை எப்படிப்பட்டவை என்று காண வேண்டும். அரசு, நிறுவனங்கள், அரசு ஆதரவு பெற்ற பொதுவான அமைப்புகளின் தளங்கள் தரும் தகவல்களை மட்டுமே அப்படியே எடுத்துக் கொள்ளலாம். புகழ்பெற்ற பத்திரிக்கைகளின் தளங்களும் உண்மைச் செய்திகளையே தரும். மற்றவற்றை தீர யோசித்த பின்னரே அல்லது மற்ற தளங்களையும் பார்த்த பின்னரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.




5. இன்டர்நெட் உங்களை கோடீஸ்வரனாக மாற்றும். இன்று இன்டர்நெட் மூலம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்தேன். பல்லாயிரக் கணக்கான டாலருக்கு அதிபதியானேன் என்பதெல்லாம் கதை. இந்த கதைகளைக் கூறி, தளங்களுக்கு இழுத்துச் சென்று நம் பணத்தைப் பறிக்கும் வழிகளாகும். இன்டர்நெட் வழியாக உங்கள் வர்த்தகத்திற்கு லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்பது உண்மையே. ஆன்லைன் வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும் என்பதுவும் உறுதி செய்யப்பட்டதே. ஆனால் அதற்காக இதனை விளம்பரம் மூலம் கூறி உங்களை இழுக்கும் இணைய தளங்கள் குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.




இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள்
Adware: : சாப்ட்வேர் பயன்பாடு ஒன்றினுள் விளம்பரம் ஒன்றினை, எடுத்துக்காட்டாக பேனர் விளம்பரச் செய்தி, இயக்கும் தொகுப்பு.




Auto Responder: ரெடிமேடாக ஏற்படுத்தி வைத்துள்ள இமெயில் கடிதத்தினைப் பதிலாக அனுப்பும் புரோகிராம். நீங்கள் ஊருக்குப் போகிறீர்களா? இமெயில் பார்க்காமல் இருக்கப் போகிறீர்களா? நான் ஊரில் இல்லை 10 நாட்கள் கழித்துத்தான் இதற்குப் பதில் அனுப்ப முடியும் என்ற செய்தியினை கடிதமாக அனுப்பி வைத்தால், உங்கள் இமெயில் முகவரிக்கு வரும் கடிதங்களுக்குத் தானாக இதன் மூலம் பதில் அனுப்பலாம். இன்டர்நெட் சேவை தரும் நிறுவனங்களும் இமெயில் கிளையன்ட் புரோ கிராம்களும் இந்த வசதியை வைத்திருக்கின்றன.
Bandwidth : ஒரு நெட்வொர்க் இணைப்பில் பரிமாறப்படும் டேட்டா எனப்படும் தகவல்கள் அளவு.




Browser: இன்டர்நெட்டில் உள்ள தகவல்களை எடுத்துத் தரும் சாப்ட்வேர் தொகுப்பு.
Buffer: தற்காலிகமாக டேட்டாவைச் சேமித்து வைக்கும் இடம்; இதனை புரோகிராம்களும் பிரிண்டர், சிடி ரைட்டர் போன்ற சாதனங்களும் பயன்படுத்தித் தங்களுக்கு வேண்டிய டேட்டாவைத் தங்க வைத்து எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும்.




Cache: இதுவும் தற்காலிக மெமரிதான். நீங்கள் பயன்படுத்தும் இணைய தளங்கள் சார்ந்த தகவல்களைத் தற்காலிகமாகச் சேர்த்து வைத்துக் கொள்ளும் இடம். ஒவ்வொருமுறை நீங்கள் அதே தளத்திற்குச் செல்கையில் அல்லது ஒரே செயல்பாட்டினை மேற்கொள் கையில் இதற்கென புதிய தகவல்களைப் பெற்று செயல்படாமல் தேக்கி வைக்கப் பட்டுள்ள இந்த கேஷ் மெமரியிலிருந்து பெற்று பிரவுசர் பயன்படுத்திக் கொள்ளும்.
Cookie: வெப்சைட் உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்துக் கொள்ளும் சிறிய புரோகிராம். அந்த வெப் சைட்டைப் பொறுத்தவரை உங்கள் அணுகுமுறை மற்றும் உங்களைப் பற்றிய தகவல்கள் இதில் பதியப்படுவதால் அந்த வெப்சைட் உங்களை எளிதாக அடையாளம் கொண்டு தேவையானவற்றை எடுத்துக் கொள்ள அனுமதிக்கும்.




DNS (Domain Name System): நாம் சொற்களில் தரும் இணைய தள முகவரியினை கம்ப்யூட்டர் புரிந்து கொள்ளும் வகையில் அதன் எண் முகவரியினைத் தரும் சிஸ்டம். ஒவ்வொரு இண்டர்நெட் சேவை நிறுவனமும் இப்படி ஒரு சிஸ்டத்துடன் தொடர்பு கொண்ட பின்பே நாம் விரும்பும் இணைய தளத்தைப் பெற்றுத் தருகிறது.
Netiquette: இணையத்தில் உலவுகையில் மற்றவர்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்கையில் ஆன் லைனில் தொடர்பு கொள்கையில் நாம் கடைப் பிடிக்க வேண்டிய அடிப்படைப் பண்புகளை இந்த சொல் குறிக்கிறது.
Quicktime : ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மல்ட்டி மீடியா புரோகிராம். இதன் மூலம் மல்ட்டி மீடியா (ஆடியோ மற்றும் வீடியோ) உருவாக்கவும், இயக்கிப் பார்க்கவும் எடிட் செய்திடவும் முடியும். இன்டர்நெட்டில் இந்த புரோகிராம் மட்டுமே இயக்கிப் பார்க்க முடியும் பைல்களை நீங்கள் கிளிக் செய்தால் இந்த ஆட்–ஆன் புரோகிராம் வேண்டும் என்றும் அதன் தளத்திலிருந்து இறக்கிப் பதியவா என்றும் உங்கள் பிரவுசர் கேட்கும். இந்த புரோகிராமினை ஏற்கனவே பதிந்து வைத்திருந்து அதற்குப் பின் புதியதாக அது மேம்படுத்தப்பட்டு இருந்தால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராமினை மேம்படுத்தவா என்றும் உங்கள் பிரவுசரில் செய்தி கிடைக்கும்.
Traceroute: இணையத் தொடர்பில் ஒரு கம்ப்யூட்டருக்கும் இன்னொரு கம்ப்யூட்டருக்கும் உள்ள தொடர்புப் பாதையைக் கண்டுபிடிக்கும் கட்டளைச் சொல். இந்த கட்டளைச் சொல்லை எம்.எஸ். டாஸ் பிராம்ப்டில் கொடுத்து ஏதேனும் ஒரு இணைய தளத்தின் முகவரியைக் கொடுத்துப்பாருங்கள். அப்போது உங்கள் கம்ப்யூட்டர் இணைய தொடர்பில் இருக்க வேண்டும். அந்த முகவரி குறிப்பிடும் இணைய தளம் உள்ள சர்வரை எந்த வழியாக உங்கள் கம்ப்யூட்டர் சென்றடைகிறது என்ற தகவல் கிடைக்கும்.




இன் டிசைன் கற்றுக் கொள்ளச் சிறந்து நூல்




அண்மைக் காலத்தில் புத்தகத் தயாரிப்புக்குப் பல வழிகளில் துணை புரியும் தொகுப்பாக இன்டிசைன் அப்ளிகேஷன் சாப்ட்வேர் பெயர் பெற்றுள்ளது. இதனை எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு வழி காட்டும் நூலாக "இன்டிசைன் சி.எஸ். 4 வரை' என்ற தலைப்பில் வீரநாதன் எழுதி வழங்கியுள்ளார். கோயம்புத்தூர் பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் வெளியிட்டுள்ளது.




டெஸ்க்டாப் பப்ளிஷிங் எனப்படும் நூல் தயாரிப்புக்குப் பெரும்பாலும் பயன்படுத் தபடும் சாப்ட்வேர் தொகுப்புகளில் பேஜ் மேக்கர் வெகுகாலமாக முன்னணியில் இடம் பெற்றிருந்தது. ஆனால் புத்தகத் தயாரிப்பில் பல சிறப்புகளைப் புகுத்த நம் தேவைகள் அதிகமான போது, பேஜ் மேக்கர் தொகுப்பின் குறைபாடுகள் தெரிய வந்தன. எனவே அவற்றை நீக்கிப் பல புதிய வசதிகளைத் தரும் வகையில் அடோப் நிறுவனம் இன்டிசைன் என்னும் டி.டி.பி. சாப்ட்வேர் தொகுப்பினை வெளியிட்டது. 1999 ஆம் ஆண்டிலேயே இது வெளிவந்த பின்னும் பேஜ்மேக்கர் தொகுப்பிலும் பல புதிய பதிப்புகள் (பேஜ் மேக்கர் 6.0., 7, 7.1 என) வெளிவந்தன. ஆனால் இன்டிசைன் அப்ளிகேஷன் புரோகிராமின் மேம்படுத்தப்பட்ட தொகுப்புகள் வெளிவந்த பின்னர், பேஜ் மேக்கர் தொகுப்பிற்கு தொடர் பதிப்புகள் வெளிவருவது நிறுத்தப்பட்டது. இதனால் பலரும் இன்டிசைன் தொகுப்பிற்கு மாறினர்.




வெகுகாலம் பேஜ் மேக்கரில் பழகியவர்களுக்கு இன்டிசைன் தொகுப்பில் பணிபுரிவது சற்று சிரமமானதாகத்தான் இருக்கும். இதனை இந்த நூலாசிரியர் வீரநாதன் உணர்ந்து, இன்டிசைன் தொகுப்பின் ஒவ்வொரு செயல்பாட்டினையும் தெளிவாகப் பட்டியலிட்டுப் படங்களுடன் விளக்கி உள்ளார். ஒவ்வொரு பக்கமும் படங்கள் கொடுத்து விளக்கி இருப்பது இந்நூலின் சிறப்பாகும். நூலின் பொருளடக்கம் மிக விரிவாக இருப்பதனால், இந்த தொகுப்பில் எந்த பிரிவில் சந்தேகம் உள்ளதோ, அல்லது எதற்கு விளக்கம் தேவையோ, அந்தப் பிரிவிற்கு எளிதாகச் சென்று தெரிந்து கொள்ள இது வழி வகுக்கிறது.




மேலும் இந்நூலுடன் தரப்படும் சிடியில் 33 பிரிவுகளில் விளக்க உரை வீடியோ கிளிப்களாகத் தரப்பட்டுள்ளன. இவற்றை வரிசையாகப் பார்க்கலாம்; அல்லது தேவைப்படும் பகுதிக்கான பைலைக் கிளிக் செய்து பார்க்கலாம். நூலில் விளக்கப்பட்டுள்ள எந்த எந்த பகுதிகளுக்கு விளக்க வீடியோ உரைகள் உள்ளன என்று நூலில் குறிக்கப்பட்டுள்ளது. இதில் தரப்படும் விளக்க உரை கை தேர்ந்த ஆசிரியர் ஒருவரின் உரை போல, கூடுதல் விளக்கங்களுடன், ஒரு நீரோடை போல ஓடுகிறது. செயல்முறைப் பயிற்சி தரும் வகையில் விளக்க உரைக்கு வீடியோ கிளிப்கள் உதவி புரிகின்றன. நூலில் தந்த விளக்கங்களுக்கு இதுவும் நல்ல தொரு துணையாக உள்ளது.




வேலை வாய்ப்பிற்கான கம்ப்யூட்டர் சார்ந்த நூல்கள், தமிழில் மிகவும் குறைவே. இந்த நூல் டி.டி.பி. துறையில், இன்டிசைன் தொகுப்பில் பணிபுரிவோருக்கு நல்லதொரு கையேடாக உள்ளது. இதன் விலை ரூ. 280. நூல் வேண்டுவோர் கோயம்புத்தூர் தொலைபேசி எண் 2323228 ஐத் தொடர்பு கொள்ளலாம்
read more...

Saturday, September 5, 2009

கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த சில வழிகள்


என்னதான் நம் வாழ்க்கையுடன் கம்ப்யூட்டர் இணைந்து விட்டாலும், பாதுகாப்புடன் அதனைப் பயன்படுத்த நூறு சதவிகித உத்தரவாதம் தர முடியாத நிலையில் தான் நாம் இருக்கிறோம். சாலையில் விபத்து நேர்கிறது என்பதற்காக நாம் சாலையில் நடக்காமலோ, பயணம் செல்லாமலா இருக்கிறோம். கவனமாகச் செல்வதில்லையா! அது போல கம்ப்யூட்டர் பயன்படுத்துவதிலும் சில எச்சரிக்கை வழிகளைக் கையாண்டால், பாதுகாப்பாகப் பணி புரியும் சூழ்நிலையை உருவாக்கலாம். கீழே இதற்கான சில சின்ன சின்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விளக்கப்பட்டுள்ளன. இவை பலமுறை இங்கு கூறப்பட்டாலும் அவற்றை மீண்டும் நினைவில் கொண்டு அமல்படுத்துவது நல்லதல்லவா!






1. பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தரும் மைக்ரோசாப்ட் நிறுவனம், இதில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து, அதற்கான தீர்வுகளை பேட்ச் பைல் என்ற வகையில் தருகிறது. மாதம் ஒருமுறை தரப்படும் இந்த பேட்ச் பைல்களை நம் கம்ப்யூட்டர்கள் இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில் தாமாகப் பெற்று அப்டேட் செய்திடும் வகையில் நம் சிஸ்டத்தில் செட் அப் செய்து வைக்க வேண்டும்.






2. இன்டர்நெட் உலகில் பல வைரஸ் புரோகிராம்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எனவே இதனைக் கண்டறிந்து தடுக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும். அந்த புரோகிராமினை அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லை எனில் புதிதாய் வரும் வைரஸ்களுக்கு எதிரான தடுப்பு வழிகள் கிடைக்காமல் போகலாம்.






3. ஏதேனும் ஒரு வழியில், இமெயில் அல்லது டவுண்லோட் ஆகும் புரோகிராம் போன்றவற்றின் மூலம், பல ஸ்பைவேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரில் வந்தமர்ந்து, நம் சிஸ்டத்தில் உள்ள நம்முடைய பெர்சனல் தகவல்களைத் திருடி அடுத்தவருக்கு அனுப்புகின்றன. எனவே ஒன்று அல்லது இரண்டு ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்களைப் பதிந்து வைத்து இயக்க வேண்டும். பொதுவாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன் இணைந்து இவை கிடைக்கும். மைக்ரோசாப்ட், விஸ்டாவுடன் விண்டோஸ் டிபன்டர் மற்றும் ஸ்பை ஸ்வீப்பர் புரோகிராம்களைத் தருகிறது.






4. நம் கம்ப்யூட்டருக்குள் வரும் ஸ்பை வேர் புரோகிராம்களைத் தடுக்கும் ஒரு வழி பயர்வால் ஆகும். நம் கம்ப்யூட்டர் பாதிக்கப்பட்டால் அதிலிருந்தும் இது போன்ற புரோகிராம்களைச் செல்ல விடாமல் பயர் வால் தடுக்கிறது. எனவே இருவழி பயர்வால் தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். விஸ்டாவுடன் இதுவும் தரப்படுகிறது. ஸோன் அலார்ம் போன்ற இலவசமாகக் கிடைக்கும் பயர்வால்களையும் பயன்படுத்தலாம்.






5. பயர்வால் புரோகிராம் ஒன்று போதும். இரண்டு இன்ஸ்டால் செய்தால் தலைவலிதான். அதே போல்தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும். இவை இரண்டு வைத்துக் கொண்டாலும் ஒரு முறை ஒன்றைப் பயன்படுத்து வதே நல்லது.






6. நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் அடுத்தவர்கள் எளிதில் கண்டுபிடித்திடும் வகையில் இருக்கக் கூடாது. எண்களும் எழுத்துக்களும் கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும். நீளமாக இருந்தால் நல்லதுதான். உங்களால் அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க இயலவில்லை என்றால் www.passpub.com என்ற தளத்தை அணுகவும்.





7. எந்த பாஸ்வேர்டையும் எந்த நேரமும் மாற்றக் கூடிய வசதியினை இன்டர்நெட்டில் உள்ள தளங்கள் தருகின்றன. எனவே பாஸ்வேர்டை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.






8. ஒரே பாஸ்வேர்டினையே அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொன்றுக்கும் மாறான பாஸ்வேர்ட் பயன்படுத்தவும்.






9. சிக்கலான மாஸ்டர் பாஸ்வேர்ட் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தளத்திற்கும் சிறிய அளவில் அதனை சிறிய அளவில் மாற்றிக் கொள்ளலாம்.






10. ரௌட்டர் இல்லாமல் பிராட்பேண்ட் கனெக்ஷன் வைத்துக் கொள்ளக் கூடாது. அது வயர்டு அல்லது வயர்லெஸ் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவை கட்டாயம் NAT மற்றும் SPI ஆகியவற்றை சப்போர்ட் செய்திட வேண்டும்.





11. ஒரு பைல் உங்களுக்கு வந்துள்ளதா? அல்லது நீங்களே கொண்டு வந்திருக்கிறீர்களா? அதில் வைரஸ் எதுவும் உள்ளதா என்று சந்தேகம் வருகிறதா? உங்கள் ஆண்ட்டி வைரஸ் கொண்டு சோதிக்க பயமா? உடனே அதனை Virustotal.com என்ற தளத்திற்கு அனுப்பவும். அல்லது அட்டாச்மென்ட் ஆக scan@virustotal.com என்ற இமெயில் முகவரிக்கு ஸ்கேன் என்ற ஒரு வரிச் சொல்லை சப்ஜெக்டில் அமைத்து அனுப்பவும். உடனே 32 வகையான வைரஸ் சோதனை செய்து உங்களுக்கு ரிபோர்ட் கிடைக்கும்.





12. சிடியைப் போட்டால் ஆட்டோ ரன் மற்றும் ஆட்டோ பிளே செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறதா? அவற்றை நிரந்தரமாக நிறுத்தும் வழிகளை மேற்கொள்ளவும். ஆட்டோ ரன் நிறுத்த எக்ஸ்பி சிஸ்டத்தில் கை வைக்க வேண்டும். ஆட்டோ பிளே நிறுத்த ட்வீக் யு.ஐ. (Tweak UI) பயன்படுத்தலாம்.





13. விண்டோஸ், தான் இயங்கும் போது பல புரோகிராம்களை பின்புலத்தில் இயக்கிக் கொண்டு இருக்கும். விண்டோஸ் டாஸ்க் மேனேஜரைப் பயன்படுத்தி என்ன என்ன புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதன் மேல் ஒரு கண் இருக்க வேண்டும். தேவையற்றது அல்லது நீங்கள் அறியாதது என்று இருப்பின் அதனை நிறுத்தலாம். அதனால் கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு பிரச்சினை இல்லை என்றால் நீக்கி வைக்கலாம்.






14. வைரஸ் குறித்த எந்த கேள்விக்கும் சந்தேகத்திற்கும் மைக்ரோசாப்ட் பதில் அளிக்கத் தயாராய் இருக்கிறது. எனவே வைரஸ் பிரச்னை இருந்தால் உடனே அதன் தளத்தைத் தொடர்பு கொள்ளவும்






15. உங்களுக்கு வந்துள்ள இமெயில் செய்திகளில் ஏதேனும் லிங்க் கொடுத்து அவற்றைக் கிளிக் செய்திட உங்களைக் கேட்டுக் கொள்ளப்படுகிறதா? அவசரப்பட்டு உடனே கிளிக் செய்திட வேண்டாம். அனுப்பியவர் நம்பிக்கைக்குரியவர் என்றாலே கிளிக் செய்திடவும். ஒரு வேளை அவரும் ஏமாந்திருப்பார் என்று எண்ணினால் அவருக்கு இது குறித்து இமெயில் ஒன்று அனுப்பிக் கேட்கவும்.






16. பொதுவான வாழ்த்துக்கள் குவியும் நாட்களில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்களின் பெயரிலேயே வைரஸ் இணைந்த வாழ்த்துகள் வரும் வாய்ப்பு அதிகம்.






17. பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய இரண்டுமே பிஷ்ஷிங் பில்டர்களைப் பயன்படுத்துகின்றன. இவற்றை இயக்க நிலையில் வைக்கவும்.






18. உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் உள்ளது. இலவசமாக இங்கு கிளிக் செய்தால் அதனைக் கண்டுபிடித்து வெளியேற்றலாம் என்ற செய்தியுடன் ஏதாவது லிங்க் வருகிறதா? உடனே அதனை நீக்கி விடுங்கள். கிளிக் செய்தால் நிரந்தரத் தொல்லை தான்.






19. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகவும் பிரபலமான பிரவுசர் தான். அதனால்தான் ஹேக்கர்களும் அந்த வழியிலேயே உள்ளே புக எண்ணுகின்றனர். எனவே மாறுதலுக்காக ஆப்பரா அல்லது பயர்பாக்ஸ் பயன் படுத்துங்கள்.






20.ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை நிரந்தரமாக அணைத்து விடுங்கள். பிரவுசர்கள் உங்களைக் கேட்காமல் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இயக்க இது உதவுகிறது. எனவே இது இயங்கக் கூடாது.






21. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களை வெப்சைட்டில் தரப்போகிறீர் களா? அந்த தளம் பாதுகாப்பானது தானா என்று பார்க்கவும். அதன் முகவரியில் ‘https’என S சேர்த்து இருக்க வேண்டும். அல்லது அட்ரஸ் பாரில் அல்லது வேறு இடங்களில் பூட்டு அடையாளம் இருக்க வேண்டும்.





22. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களையோ போட்டோக்களையோ இணையத்தில் இட வேண்டாம். அவை நிரந்தரமாக அங்கு தங்கி யாரும் எடுத்துக் கையாளும் நிலைக்கு தள்ளப்படும்.






26. பொதுவான பப்ளிக் கம்ப்யூட்டர் மையங்கள் மூலம் நீங்கள் பிரவுசிங் செய்திடும் நிலை ஏற்பட்டால் உங்கள் பிரவுசிங் பற்றிய தகவல்களை அழித்து விட்டு வெளியேறுங்கள். அதே போல அத்தகைய கம்ப்யூட்டர்களில் பாஸ்வேர்டுகளை சேவ் செய்து வைக்காதீர்கள்.






27. உங்களுக்கு ஒரு சேவையை வழங்குகையில் இணைய தளங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உறுதி செய்திட உங்கள் இமெயில் முகவரிகளைக் கேட்கும். 10 நிமிடத்திற்குள் செய்தி அனுப்பப்படும் என்று செய்தி வரும். அப்போது தற்காலிக இமெயில் முகவரி தரும் 10minutemail.com போன்ற தளங்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தளம் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் முகவரிகளை உங்களுக்கு வழங்கும்.





28. உங்களுடைய வழக்கமான இமெயில் முகவரியை உங்கள் உற்றவர்களுக்கும் நண்பர்களுக்கு மட்டுமே தரவும். இலவச இமெயில் முகவரிகளைத் தருவதற்கு கூகுள், மைக்ரோசாப்ட் லைவ் மெயில், யாஹூ இருக்கும்போது ஸ்டெப்னி இமெயில் முகவரிகளை நிறைய வைத்துக் கொள்ளலாம்.






29. மொத்தமாக வரும் ஸ்பேம் மெயில்கள் உங்களுக்குத் தேவையான செய்தியைக் கொண்டு வந்திருந்ததாக அறிந்தாலும் அவற்றைப் படிக்க வேண்டாம். ஏனென்றால் திறந்து படித்தால் உங்களுடைய முகவரி அவர்களிடம் சிக்கி விடும்.






30. இமெயில்களை ஸ்பேம் பில்டர் கொண்டு பயன்படுத்தவும். தண்டர்பேர்ட் தன்னிடத்தே ஒரு நல்ல ஸ்பேம் பில்டரைக் கொண்டுள்ளது. அவுட்லுக் 2003 மற்றும் அவுட்லுக் 2007 ஆகியவை மைக்ரோசாப்டின் ஸ்மார்ட் ஸ்கிரீன் என்னும் பில்டரைப் பயன்படுத்துகின்றன. இது உங்கள் மெயிலைப் படித்து அதன் தகவல்களிலிருந்து அது ஸ்பேம் மெயிலா என அறிந்து அழிக்கிறது. இவ்வகையில் ஜிமெயில் கிட்டத்தட்ட எந்த குறைபாடும் இன்றி உள்ளது.
read more...